பாருங்க..! முழுசா ஜெகன் மோகன் ரெட்டியாக மாறியுள்ள நடிகர் ஜீவா..!
மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘யாத்ரா’.
ராகவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக யாத்ரா 2-ம் பாகம் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.சொன்னது சொன்னபடி தற்போது ‘யாத்ரா-2’ திரைப்படம் உருவாகி உள்ளது . இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஆந்திர முதலமைச்சர் ஆகிருப்பது வரை நடந்த சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது .
இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அசத்தலான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.