காளை முத்திரையுடன் வெளியான வாடிவாசல் டைட்டில் லுக்..!

 
சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தில் டைட்டில் லுக் வெளியாகியுள்ளதை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா சூர்யா-40 படத்தில் நடித்து வருகிறார். இதனுடைய ஷூட்டிங் மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் வி. கிரியேஷன்ஸ் சார்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

அதை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு காளை முத்திரை இடம்பெற்றுள்ளது. இதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதை தொடந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் துவங்கப்படுகிறது. இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிகர்கள், நடிகையர் தேர்வு நடைபெறவுள்ளது.
 

From Around the web