விமல் நடித்து வரும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

 
1

நடிகர் விமல் பசங்க, களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களின்மூலம் பிரபலமானவர். இயல்பான இவரது நடிப்பிற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஹீரோவாக இருந்த விமல்,  சமீபகாலமாக ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அண்மையில் விமல் நடிப்பில் வெளிவந்த ‘மன்னர் வகையறா’,  ஓரளவு வசூல் செய்ததால் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்க பாட்டன் சொத்து’, ‘சண்டக்காரி’, ‘கன்னி ராசி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனைத் தொடர்ந்து ‘படவா’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’, ‘ப்ரோக்கர்’ உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விமல் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நரங் மிசா என்பவர் நடித்து வருகிறார். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இப்படத்தில் கிஷோர் படத்தொகுப்பாளராக உள்ளார். ஒடியன் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘வெற்றி கொண்டான்’ என்ற தலைப்பில் வெளியாகி போஸ்டரில் கத்தியுடன் படு கொடூரமாக விமல் இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From Around the web