நெகிழ்ச்சி..! தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்..!
Jun 23, 2024, 08:05 IST

தமிழ் நாட்டின் தளபதி என அழைக்கப்படுபவர் விஜய் ஆவார். முன்னணி நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்திலும் நடித்து வருகின்றார். தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ள இவர் நேற்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த நிலையிலேயே நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம், அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் த.வெ.க. நிர்வாகி எஸ்.கே.எஸ். நெப்போலியன் ஆகியோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் .