காதல் கண் கட்டுதே...காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்!

காதல் திருமணம் செய்து கொண்ட செலிப்ரிட்டி ஜோடிக்கள் யார் யார் என இங்கு பார்ப்போமா?
2 /8
பாக்கியராஜ்ஜின் மகன் சாந்தனுவும், தொகுப்பாளினி கீர்த்தியும் 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட இவர்கள் ஒன்றாக ஒரு ஆல்பம் பாடலிலும் இணைந்து நடித்திருக்கின்றனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் பற்றிகொண்டது.
3 /8
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நாயகி, குஷ்பு. இவரும் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். முறை மாமன் படத்தில் குஷ்பூ ஹீரியோனாக நடித்திருப்பார். அப்படி நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுந்தருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.
4 /8
தற்போது தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக உள்ளார், அட்லீ. இவர், சினிமா உலகில் துணை நடிகையாக இருந்த பிரியாவை பல வருடங்களாக காதலித்தார். தனது முதல் படமான ராஜா ராணி ரிலீஸ் ஆன உடனே 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
5 /8
90ஸ் குழந்தைகளுக்கு பிடித்த கதாநாயகியாக இருந்தவர், சினேகா. இவரும் பிரசன்னாவும் 2012ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ் மக்களுக்கு பிடித்த ஜோடிகளுள் இவரும் ஒருவர்.
6 /8
‘மரகத நாணயம்’ படத்தில் நிக்கி கல்ராணியும் ஆதியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிக்கும் போது காதலித்து டேட்டிங் செய்து கொண்டிருந்த இவர்கள், தொடர்ந்து சில படங்களில் ஜோடியாக நடித்தனர். இவர்களுக்கு, 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
7 /8
அஜித்-ஷாலினி அமர்களம் படத்தில் ஒன்றாக நடித்தனர். ஷாலினியிடம் காதலில் விழுந்த அஜித், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் காலம் தாமதிக்காமல் ப்ரப்போஸ் செய்து விட்டார். இவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி 2000ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
8 /8
ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளுள் டாப் இடத்தில் இருப்பவர்கள், சூர்யா-ஜோதிகா. முதன் முதலாக இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு, காக்க காக்க, மாயாவி, பேரழகன், ஜூன் ஆர், உயிரிலே கலந்து, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்தனர். இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரகுல் ப்ரீத் சிங்.இவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனது காதலர் ஜாக்கி பக்னானியை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
மீதா ரகுநாத்
நடிகை மீதா ரகுநாத், முதலில் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் குட் நைட் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டார்.
அபர்ணா தாஸ் – தீபக் பரம்போல்
நடிகர் விஜயின் பீஸ்ட் மற்றும் கவினின் டாடா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அபர்ணா தாஸ்.இவர் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யா – உமாபதி ராமையா
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ்
தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இவர் தனது காதலன் நிக்கோலாய் சச்தேவை கடந்த ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
இவர் தனது காதலன் சாய் விஷ்ணுவை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த் – அதிதி ராவ்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.
இவர் நடிகை ஆதிதி ராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களையும் திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்தது.
நாக சைதன்யா – சோபிதா துலிபாலா
நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களின் வாழ்வில் விரிசல் ஏற்பட இருவரும் கடந்த 2021 இல் பிரிந்தனர்.அதைத்தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது.
காளிதாஸ் ஜெயராம் -தாரிணி
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், மாடல் அழகி தாரிணியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில்
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.