லவ் டுடே ரீமேக்கில் இணையும் ஆமிர் கான் மகன், ஸ்ரீதேவியின் மகள்..!!

கோமாளி படம் மூலம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான படம் லவ் டுடே. படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடித்திருந்தார். ’நாச்சியார்’ புகழ் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ரவி உள்ளிட்டோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வெறும் ரூ. 5 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம், தமிழில் மட்டும் ரூ. 150 கோடி லாபம் ஈட்டியது. இதே படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டும் வெளியானது. அந்த பதிப்பும் அசுரத்தனமான வெற்றியை பதிவு செய்தது. தற்போது ‘லவ் டுடே’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்வைத் சந்தன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கதாநாயகனாக ஆமிர் கானின் மகன் ஜூனைத் கான், நாயகியாக ஸ்ரீதேவியன் மகள் குஷி கபூர் நடிக்கின்றனர். விரைவில் படத்துக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.