தெலுங்கில் அடியெடுத்து வைக்கும் ‘லவ் டுடே‘ இவானா!

 
1

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே‘ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை இவனா. இவர் இதற்கு முன்பு ‘நாச்சியார், ஹீரோ‘ உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இதில் எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே‘ படத்தின் வெற்றிக்கு பிறகு பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்‘ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவை தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை இவானா.

1

தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘செல்பிஸ்‘ படத்தில் கதாநாயகனாக தில் ராஜூவின் உறவினரான ஆசிஷ் நடிக்கிறார். இப்படத்தை காசி விஷால் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடிக்கிறார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

From Around the web