இன்று வெளியாக இருக்கும் ‘லவர்’ படத்தின் டீஸர் ..!

 
1

ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய் பீம்’ திரைப்படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டன், சமீபத்தில் வெளியான ’குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மணிகண்டன், பிரபு வியாஸ் என்பவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’லவ்வர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அட்டகாசமாக இருந்த இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் ஜோடியாக கௌரி பிரியா ரெட்டி நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பதும் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் பரத் விக்ரமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web