லால் சலாம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் லவ்வர் ?

 
1

தனுஷ் நடித்த 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.  இந்நிலையில் இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் இதன் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் பிப்ரவரி 9 ஆம் தேதி நடிகர் மணிகண்டனின் ”lover” திரைப்படம் வெளியாக உள்ளதாம். என்னதான் சின்ன பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும்  இவரின் ”குட் நைட்”  மூவி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மணிகண்டனின்  ”LOVER” திரைப்படம் ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்படத்துக்கு போட்டியாக அமையும் என கருதப்படுகிறது. இவ்வாறு சவாலான சூழ்நிலையை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

From Around the web