லூசிபர் பார்ட் 2 - “எம்புரான்” படத்தின் டீசர் ரிலீஸ்..!

2019 ஆம் ஆண்டில் வெளியான லூசிபர் என்ற திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் தொடர்ச்சி யாகவே “L2E எம்புரான்” திரைப்படம் இரண்டாவது பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் விழா சமீபத்தில் கொச்சியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் ஆன மம்முட்டி விருந்தினராக கலந்து கொண்டுள்ளா.ர் மேலும் இதில் படத்தில் நடித்த நடிகர்களும் படக்குழுவினர்களும் பிறமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி என உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆக்சன் திரில்லர் கலந்த ரோலில் மோகன் லால் நடித்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மோகன்லால் நடித்துள்ள “L2E எம்புரான்” படத்தின் டீசரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கே திரில்லான ஜானலில் டீசர் அமைந்துள்ளதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.