லூசிஃபர் தெலுங்கு ரீமேக்- வெளியானது புது அப்டேட்..!

 
மோகன் ராஜா மற்றும் சிரஞ்சீவி

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த லூசிஃபர் படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

மோகன்லால், மஞ்சு வாரியார் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘லூசிஃபர்’. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழக ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றிய நடிகர் ராம் சரண், படத்தை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இது அவருடைய 153 படமாக தயாராகவுள்ளது.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். கொரோனா ஊரடங்கு நிறைவுக்கு வந்துள்ளதால், இப்படத்தின் உருவாக்கப் பணிகள் துவங்கவுள்ளன.

தற்போது லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கிற்கு இசையமைக்கப்போவது யார் என்கிற விபரம் தெரியவந்துள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன். எஸ் தான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதுதொடர்பாக அவரே ட்விட்டரில் பதிவிட்டு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

From Around the web