“லக்கி பாஸ்கர்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

 
1

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களால் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் . மலையாளம் , தமிழ் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அன்பு மகனான இவர் தற்போது தனது தந்தையை மிஞ்சும் அளவிற்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் தான் ‘லக்கி பாஸ்கர்’ தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

From Around the web