வீரம், வேதாளம், விஸ்வாசம், வலிமை வரிசையில் தற்போது  விடாமுயற்சி..!!

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் படத்தின் இயக்குநர், தலைப்பு மற்றும் படக்குழு உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
magizh thirumeni

நடப்பாண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து அவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும் இது அஜித்தின் 62-வது படம் என்பதால், படக்குழு இப்படத்தை AK62 என்று குறிப்பிட்டது.

ஆனால் விக்னேஷ் சிவன் எழுதிய கதையை அஜித்துக்கு பிடிக்கவில்லை, லைகா நிறுவனமும் விரும்பவில்லை. இதனால் அவரிடம் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் திரும்பப்பெறப்பட்டு, AK62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேணிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இயக்குநர் மாற்றம் உள்ளிட்ட AK62 தொடர்பான எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏ.கே. 62 படம் மற்றும் படக்குழு தொடர்பான தகவல்களை லைகா வெளியிட்டுள்ளது. அதன்படி AK 63 படத்துக்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏற்கனவே வெளியான தகவலின்படி மகிழ் திருமேனி தான் இயக்குகிறார்.


படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்போது நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் உலக சுற்றுலா சென்றுள்ளார். தற்போது நேபாளத்தில் இருக்கும் அவர், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியா திரும்புகிறார். அப்போது விடாமுயற்சி படத்திற்கான சக நடிகர்களின் தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்தின் பிறந்தநாளையொட்டி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருடைய 62-வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் ட்விட்டர் டிரெண்டிங்கில் #விடாமுயற்சி ஹேஷ்டேக் இந்தியளவில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.

 அதேசமயத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை வரிசையில் விடாமுயற்சி இடம்பெற்றுள்ளது. இதனால் நடிகர் அஜித் மீண்டு  V சென்டிமென்ட்டை தொடருவதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

From Around the web