மாரி சீரியலில் நடிக்கும் கதாநாயகி திடீர் விலகல்..! 

 
1

மாரி சீரியலில் நடிக்கும் கதாநாயகி ஆன அஷிகா படுகோன் திடீரென விலகுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மாரி சீரியல் கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் வரவேற்புடன்  ஒளிபரப்பாகி வருகின்றது.. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் மாரிக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய சக்தி காணப்பட்டது.

இதனால் இந்த சீரியலில் அமானுஷ்யம், மாந்திரீகம், பாம்பு, ஆவி என பல சுவாரசியத்தோடு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான நிலையிலே தற்போது இந்த சீரியலில் இருந்து கதையின் நாயகியான அஷிகா படுகோன் வெளியேறியுள்ளார். எனினும் அவர் வெளியேறியதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. 

எனவே, இந்த சீரியலில் கதாநாயகியாக காணப்படும் மாரியின்  கேரக்டர் இனி என்ன ஆகும்? அவருக்கு பதிலாக வேற யாரும் களம் இறங்குவார்களா? இல்லை இத்துடன் இந்த சீரியலுக்கு மூடு விழா நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை, நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் சட்டென முடிக்கப்பட்டது. அதற்கு நடிகர் ஆகாஷின் உடல்நலம் தான் காரணம் என கூறப்பட்டது. தற்போது மாரி சீரியலின் நடிகையும் திடீரென விலகியது ஜீ தமிழ் சேனலுக்கு தான் தலைவலி என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web