வானத்தை உற்றுப்பாக்கும் சிவகார்த்திகேயன்- எஸ்.கே யூனிவெர்ஸ் உருவாகிறதா..??

வானத்தில் அண்ணாந்து பார்த்துவிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஆற்றல் பொருந்திய ஒரு சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
 
maaveeran

மண்டேலா படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவு, அதிதி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சரிதா, மிஷ்கின், குக் வித் கோமாளி புகழ் மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு நாளிதழில் கார்டூனிஸ்ட்டாக வேலை வாங்கும் இளைஞன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு, தங்கையை வம்பிழுத்துக் கொண்டு இருக்கும் சராசரியான வடசென்னை இளைஞர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

உடன் பணியாற்றும் அதிதி சங்கர் மீது அவர் காதல் வயப்படுகிறார். ஒருசராசரி இளைஞனாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் தலைவரான மிஷ்கினுக்கும் ஒரு சூழலில் மோதல் வெடிக்கிறது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் படத்தின் கதை. 

டிரெய்லரை பார்க்கும் போது சிவகார்த்திகேயனுக்கு ஒரு சூப்பர் பவர் கிடைப்பது போல உள்ளது. அதை வைத்து அவர் வில்லன் கேங்கை பந்தாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வடசென்னை கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.  

மாவீரன் பட டிரெய்லர் இணையதளத்தில் வெளியான உடன் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஒரு மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் அந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். எனினும், படத்தின் டிரெய்லர் ஸ்பைடர்மேன் படத்தை நினைவூட்டுவதாக பலரும் கமெண்டு செய்து வருகின்றனர்.

From Around the web