சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதால் மதுமிதா எடுத்த ’திடீர்’ முடிவு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்துபோனதை அடுத்து, நடிகை மதுமிதா அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 
 
madhumitha

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த மதுமிதா, ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நடித்த ’ஜாங்கிரி’ என்கிற கதாபாத்திரம் மதுமிதாவை சிறந்த நகைச்சுவை நடிகையாக அடையாளப்படுத்தியது.

அதற்கு பிறகு  ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, புலி, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். இதுதவிர சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மதுமிதா நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 

madhumitha

அந்த சீசனில் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும், சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கான பட வாய்ப்புகள் வெகுவாக குறையத் தொடங்கின.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார் மதுமிதா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா என்கிற தொடரில் காவல்துறை அதிகாரியாக அவர் நடிக்கவுள்ளார். அதற்காக காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

biggboss madhumitha

இதுமட்டுமின்றி தி நைட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக சினிமாவில் நடித்த ‘தமிழரசன்’ படம் வரும் 2023-ம் ஆண்டு வெளிவரவுள்ளது.


 

From Around the web