எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவிருந்த முதல் கதாநாயகி இவர்தான்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முதல் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை தொடர்பான விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
 
madhumitha

கோலங்கள் சீரியல் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் திருச்செல்வம், தற்போது இயக்கி வரும் சீரியல் எதிர்நீச்சல். தமிழ் தொலைக்காட்சி டி.ஆர்.பி பட்டியலில் எப்போதும் முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் இந்த தொடருக்கு, பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இந்த சீரியலில்  மாரிமுத்து, ஹரிப்ரியா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா ஹெக்டே. எனினும், இந்த தொடரில் கதாநாயகியாக முதலில் நடிக்கவிருந்தது மதுமிதா கிடையாதாம்.

ashika

அவருக்கு முன்னதாக இந்த ரோலில் நடிக்க இருந்தவர் ஆஷிகா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். சில தனிப்பட்ட காரணங்களால் அவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு பிறகு தான் அந்த வாய்ப்பு மதுமிதா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது.

From Around the web