வாத்தி கம்மிங் பாடலுக்கு கலக்கல் நடனமாடிய மாதுரி தீட்சித்..!

 
மாதுரி தீக்‌ஷித்

பாலிவுட்டில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை மாதுரி தீட்சித் வாத்தி கம்மிங் பாடலுக்கு கலக்கல் நடனம் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் தேசியளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. தமிழக ரசிகர்களை விடவும், வட இந்திய ரசிகர்கள் மற்றும் திரை உலகம் இப்பாடலை வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகை மாதுரி தீட்சித் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப் மற்றும் சுனில் ஷெட்டி இருவரும் விருந்தினர்களாக பங்கேற்றனர்.

From Around the web