பிரபல நடிகர்கள் கட்டிய பங்களாவின் கட்டுமான பணியை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 6, 2024, 08:05 IST
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல் அடிப்படையில் கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர் அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் என வழக்கு பதியப்பட்டு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 - cini express.jpg)