மகனுடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட மதராசபட்டினம் நடிகை..! 

 
1

மதராசபட்டினம் என்ற படத்தில் ஆர்யாவுடன் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை எமி ஜாக்சன். அதன் பின்பு விக்ரமுடன் தாண்டவம், ஐ , உதயநிதியுடன் கெத்து, இறுதியாக அருண் விஜயுடன் மிஷன் சாப்டர் ஒன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் பிரபலமான எமி ஜாக்சன் ஒரு கட்டத்தில், ஜார்ஜ் பன்னாயுட்டு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு அவருடன் வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். அதன் பின்பு அவர்களுக்கு மகன் ஒருவரும் பிறந்தார். ஆனால் அதன் பின்பு இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதை அடுத்து இங்கிலாந்து நடிகரான எட்வெஸ்ட் விக்குடன் டேட்டிங்கில் இருந்து வந்தார் எமி ஜாக்சன். சமீபத்தில் தான் இவர்களுடைய திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது,

இந்த நிலையில், தற்போது தனது மகனுடன் இயற்கை காட்சிகளை ரசித்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அதில் அவருடைய மகனின் சுட்டித்தனமும் அவர் மகன் மீது கொண்ட பாசமும் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்,

From Around the web