நண்பன் படத்தில் முதல் நடிக்கவிருந்தது இவரா...??
இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் 3 இடியட்ஸ். தமிழ்நாட்டிலும் இந்த படம் சிறப்பான வசூலை பதிவு செய்தது. ஆமிர் கான், மாதவன், போமன் ஈரானி, கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தழுவி 2012-ம் ஆண்டு நண்பன் என்கிற படத்தை ஷங்கர் இயக்கினார். இதில் விஜய், ஸ்ரீகாந்தி, ஜீவா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் இலியானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழக ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற நண்பன் படம், விஜய்யின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாகிவிட்டது.

இப்படத்தில் ஸ்ரீவட்சன் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யன் நடித்திருப்பார். ஹீரோ கதாபாத்திரத்துக்கு இணையான பாத்திரப் படைப்பை கொண்ட தான் ஸ்ரீவட்சன் கதாபாத்திரம். ஆனால் முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிவிருந்தது சத்யன் கிடையாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தான் ஸ்ரீவட்சனாக நடிக்க வேண்டியவர். அப்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீடியா வெளிச்சத்தில் இருந்து அவர் விலகி இருந்தார். அதனால் அவரால் நண்பன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது
 - cini express.jpg)