பிக்பாஸ் வின்னரை இரண்டாவதாக திருமணம் செய்யும் மேக்னா ராஜ்..?

 
மேக்னா ராஜ்
பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ் இரண்டாவதாக பிக்பாஸ் பிரபலத்தை திருமணம் செய்யவுள்ளதாக வெளியான செய்தி குறித்த பின்னணி விபரங்கள் தெரியவந்துள்ளன.

கடந்தாண்டு ஜூலை 7-ம் தேதி கன்னட நடிகரும் மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் காலமானார். அப்போது மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். கணவருடைய மறைவை அடுத்து மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மகனுக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயரிட்டார் அவர். அதை தொடர்ந்து பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியாகி கன்னட திரையுலகில் தீயாக பரவியது.

அதன்படி பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் பிரதமை நடிகை மேக்னா இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை நடிகர் பிரதம் மறுத்துள்ளார். இதன்மூலம் இந்த திருமண வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.

From Around the web