தயாரிப்பாளர் ரவீந்தரை பிரிந்துவிட்டாரா மகாலட்சுமி..??

அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
raivnhdar

தமிழில் படம் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்று லிப்ரா புரொடக்‌ஷன்ஸ். இதனுடைய நிறுவனராக இருப்பவர் ரவீந்தர். இவரை ஃபேட் மேன் என்றும் சமூகவலைதளங்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் வனிதா குறித்து அவதூறாக பேசி வந்த விவகாரத்தில் ரவீந்தர் பிரபலமானார். ஏற்கனவே விவகாரத்து பெற்று தனியாக இருந்த ரவீந்தரை, சீரியல் நடிகை மகாலட்சுமி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். 

இதன்மூலம் மேலும் அவர் பிரபலமானார். அவர்கள் இருவரும் இணைந்து என்ன செய்தாலும், சமூகவலைதளங்களில் வைரலாகின. இதனால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி சமூகவலைதலங்களில் செலிப்ரிட்டி தம்பதிகளாக வலம் வரத் துவங்கினர்.

இந்நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுடைய சிரிப்பை பிறர் விரும்புவது கிடையாது. அவர்கள் எப்போது நீங்கள் சோகமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரவீந்தரும் மகாலட்சுமியும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரியவருகின்றன.

அதேபோல் ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் எந்த பதிவு போட்டாலும், அதற்கு கீழே கமெண்ட் செய்வதை மனைவி மகாலட்சுமி எப்போதும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அப்படியெல்லாம் செய்வது கிடையாது. அதேபோன்று ரவீந்தருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிடுவது இல்லை.

From Around the web