நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது ‘மகான்’.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

 
1

ஜகமே தந்திரம், நவரசா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘மகான்’.

இதில், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பல்வேறு படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனிடையே, சரியான தேதி அமையாத காரணத்தால் ‘மகான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

‘மகான்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படம் திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

From Around the web