டிஆர்பி லிஸ்டில் என்ட்ரி கொடுத்த மகாநதி சீரியல்..!

 
1

ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ? எந்த சீரியல் எந்த இடத்தில இருக்கின்றது, TRP புள்ளிகளில் எந்த சீரியல் முன்னேற்றத்தை கண்டுள்ளது, எந்த சீரியல் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்த வார TRP புள்ளி பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது

வழக்கம் போல இந்த வாரமும் சன் டிவியின் சிங்கப்பெண்னே சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் முன்பை விட இந்த வாரம் சற்று குறைவான TRP புள்ளிகளை தான் சிங்கப்பெண்னே சீரியல் பெற்றுள்ளது. இந்த வாரம் சிங்கப்பெண்னே சீரியல் 8 .92 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் இருக்கின்றது.

ஒரு சில புள்ளிகளின் வித்யாசத்தில் மூன்று முடிச்சு சீரியல் முதலிடத்தை தவறவிட்டுள்ளது. இந்த வாரம் மூன்று முடிச்சு சீரியல் 8 .48 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. மூன்றாவது இடத்தில் சன் டிவியின் கயல் சீரியல் இருக்கின்றது. கயல் சீரியல் இந்த வாரம் 8 .22 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்திருக்க நான்காவது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல்7 .64 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் மருமகன் சீரியல் 7 .32 புள்ளிகளுடன் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் TRP யில் 7 .06 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கின்றது.


ஏழாவது இடத்தில் மீண்டும் ஒரு சன்டிவியின் சீரியல் தான் இருக்கின்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்னம் சீரியல் 6 .94 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கின்றது. எட்டாவது இடத்தில் புத்தம் புதிய தொடரான அய்யனார் துணை சீரியல் இருக்கின்றது. இந்த வாரம் அய்யனார் துணை சீரியல் 6 .85 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.


மேலும் ஒன்பதாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் 2 சீரியல் உள்ளது.இந்த சீரியல் இந்த வாரம் 6 .63 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது. பத்தாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் இடம்பிடித்துள்ளது. மகாநதி சீரியல் இந்த வாரம் 6 .39 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் இருக்கின்றது

From Around the web