ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் மஹத் ..!

 
மஹத் - பிராச்சி தம்பதி

மங்கத்தா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் மஹத். அதை தொடர்ந்து ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து புகழடைந்தார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மஹத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதை தொடர்ந்து வெளியே வந்த அவர், தன்னுடைய நீண்ட நாள் காதலியும் நடிகையுமான பிராச்சியை திருமணம் செய்துகொண்டார்.

கொரோனா ஊரடங்கின் போது பிராச்சிக்கு வளைப்பூட்டல் நிகழ்ச்சி நடந்தது. அதுதொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறினர்.

இந்நிலையில் நடிகர் மஹத் மற்றும் பிராச்சி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மகன் பிறந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அனைவருடைய வாழ்த்துக்களும் பிராத்தனைக்கும் நன்றி. அப்பாவானதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என மஹத் தெரிவித்துள்ளார். 

From Around the web