அம்மாடியோவ்... மகேஷ் பாபு வாங்கிய புதிய சொகுசு கார்- இவ்வளவு விலையா...??
கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் சர்காருவாரி பாட்டா. இதையடுத்து த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயகத்தில் அவர் நடித்து வரும் படம் குண்டூர் காரம். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் உள்ளனர். ஏற்கனவே ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், மற்றொரு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக இருந்தது.
ஆனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட, அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யும் முனைப்புடன் படக்குழு செயல்பட்டு வருகின்றது. ஹைதராபாத் அருகே ஜன்வாடா என்கிற பகுதியில் குண்டூர் காரம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முன்னதாக தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் மாற்றப்பட்டு வேறொரு இசையமைப்பாளரை தேடும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த படத்தை முடித்தவுடன் மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது மகேஷ் பாபு புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ஆடம்பரக் காரை வாங்கியுள்ளார். இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 6 கோடி என்று கூறப்படுகிறது. தற்போது இந்த காரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் பலர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் வைத்துள்ளனர். சிரஞ்சீவி, ஜீனியர் என்.டி.ஆர். ஸ்ருதிஹாசன் என பலரிடமும் இந்த கார் உள்ளது. ஆனால் மகேஷ் பாபு வைத்திருக்கும் கோல்டன் கலர் அரிய வகையானதாம். ஹைதராபாத்தில் இருக்கும் ஒரே கோல்டன் கலர் ரேஞ்ச்ரோவர் அவருடையது மட்டும் தான்.