மகேஷ் பாபுவை மோசமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

 
1

மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் குண்டூர் காரம்.

ஆனால், அம்மா பாசத்தை அளவில்லாமல் பிழிந்து இந்த படத்தையும் சுமார் ரக படத்தின் வரிசைக்கே கொண்டு வந்து விட்டனர். அம்மாவை பிரிந்து மகனும் அவனது தந்தையும் வாழ்ந்து வரும் நிலையில், தாத்தா பிரகாஷ் ராஜ் மகனை அழைத்து உனக்கும் உங்க அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக் கொடுத்து விடு என அழைக்க தனது அம்மாவுக்கு தன் மீது பாசம் இருக்கிறதா? என்பதை ஆராய போராடும் மகனின் கதை தான் இந்த படம்.

ஆனால், படத்தை ஆரம்பித்ததும் கதைக்குள் செல்லாமல் ஹீரோயினை காதலிப்பது, டூயட் பாடுவது, சண்டை போடுவது என சம்பந்தமில்லாமல் கதை செல்கிறது என்றும் கடைசியில் மகேஷ் பாபு கொட்டும் அம்மா பாசத்தை பார்க்க முடியவில்லை என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை.

அந்த விமர்சனத்தில் குண்டூர் காரம் என்றதும் படம் காரமாக இருக்கும் என பார்த்தால், ஹீரோ மகேஷ் பாபு. ஏன்டா இந்த மூஞ்சியை பார்த்தா மிளகாய் மாதிரி இருக்கா.. நடுவகிடு எடுத்து தலைசீவி, பூ வச்சு பொட்டு வச்சா அது இன்னொரு ஹீரோயின்டா என பங்கமாக கலாய்த்துள்ளார். நம்ம ஊர் ரசிகர்களிடம் திட்டுவாங்கியது பத்தாது என மகேஷ் பாபுவின் தெலுங்கு ரசிகர்களிடமும் திட்டு வாங்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

From Around the web