’தளபதி 66’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் மகேஷ் பாபு மகள்..?

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவருடைய மகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பரை வரை நடைபெற்றவுள்ளது. அதனால் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெரும் பொருட்செலவில் உருவாக்கிட திட்டமிட்டுள்ள இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் தில்ராஜூ ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தளபதி 66 அதிரடி கதையாக இல்லாமல், செண்டிமண்ட் படமாக உருவாகும் என தகவல்கள் கூறுகின்றன. அதனால் படத்தில் நிறைய நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவுக்கு ஏற்ப கதாபாத்திரங்களின் தேர்வு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.