பிரபல விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல் ?

 
1

விஜய் டிவியில் குடும்ப பின்னணிக் கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு அண்ணன், மூன்று தம்பிகள் மற்றும் அவர்களது மனைவி என ஒரு மிகப்பெரிய கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது இந்த சீரியல். 

pandian stores

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி மூர்த்தி அண்ணணிடம் சண்டைப் போட்டுக் கொண்டு ஜீவாவும், கண்ணனும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் இந்த சீரியலில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு கதைக்களத்தில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 

pandian stores

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவண விக்ரம், விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறும்படங்களில் நடித்து வந்த சரவண விக்ரம், விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் கதாபாத்திரமாக மாறி நடித்து வந்தார். அவரது விலகல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதை உறுதிப்படுத்து விதமாக கண்ணனின் மனைவியாக நடித்து வரும் விஜே தீபிகா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தீபிகா வெளியிட்டுள்ளார். அதோடு சுவாரஸ்சியமான ஒன்று வரவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அது சரவண விக்ரம் விலகியதால், அதற்கு பதிலாக நவீன் இணைந்துள்ளதை கூறப்படுகிறது 

From Around the web