நடிகர் காளையனுக்கு இப்படியொரு பேக்கிரவுண்டு உண்டா..??
தமிழில் வெளியான ஜிகர்தண்டா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் காளையன். அந்த படத்தில் அவர் பாபி சிம்ஹாவின் அடியாளாக நடித்து கவனமீர்த்தார். அதை தொடர்ந்து ஜகமே தந்திரம், பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4-ல், நடிகர் காளையன் போட்டியாளராக பங்கேற்றார். காலிறுதிச் சுற்றுக்கு முந்தையச் சுற்று வரை அவர் நிகழ்ச்சியில் இருந்தார். காளையனுக்கு காண்டிணண்ட்டல் குக்கிங் பெரியளவில் தெரியாது என்பதால் அவர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.
எனினும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருந்தே, தனது சொந்த ஊரான மதுரையில் காளையன் நொறுக்குத் தீனி வணிகம் செய்து வருகிறார். முறுக்கு, காராச்சேவு, பூந்தி, அதிரசம் போன்ற ஸ்நாக்ஸுகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரிடம் 150-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர் தயாரிக்கும் நொறுக்குத் தீனி வகைகள் அனைத்தும் தமிழகம் முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு பிரபலங்களும் அவரிடம் இருந்து நொறுக்குத் தீனிகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அதன்காரணமாகவே அவருக்கு சமையலில் ஆர்வம் ஏற்பட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.