மேஜர் முகுந்தன் ஒரு சூப்பர் ஹீரோ - நடிகர் சிவகார்த்திகேயன்!

 
1

நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் இம்மாதம் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மிகச் சிறப்பாக படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த வீடியோவில் மேஜர் முகுந்தின் மனைவி இந்துவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமரன் ஒரு அறிமுகம் என்று படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இவர்களுடன் மேஜர் முகுந்தனின் மனைவி இந்துவும் பங்கேற்று இருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு மேஜர் முகுந்தின் ஏவி ஒன்றையும் படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பினர். இந்த படம் குறித்து பல்வேறு சுவாரசியங்களை படக்குழுவினர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த படம் உருவாக்குவதில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும் ஆனால் ஒருமுறை தான் முகுந்தனின் மனைவி இந்துவை சந்தித்தபோது தான் அந்த விருப்பம் முழுமை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியத்தை நடிகர் கமல்ஹாசன் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை தான் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தன்னை தான் இந்த படம் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கி மிகவும் கனமானது என்றும், அதை கையாள்வதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேஜர் முகுந்தன் ஒரு சூப்பர் ஹீரோ என்றும் அவரது வாழ்க்கையை திரையில் சொல்வதற்கு தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வாய்ப்பு இது என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த படத்தில் மேஜர் முகுந்தன் மற்றும் அவரது காதல் மனைவி இந்துவின் வாழ்க்கையை வெளிப்படுத்துவது அதிகமான பொறுப்பை ஏற்படுத்தியவதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். படம் மேஜர் முகுந்தின் பயோபிக்காக உவாகியுள்ள நிலையில் படம் இந்த ஆண்டின் படங்களில் மிக அதிகமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

From Around the web