கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்.கே நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் முக்கிய அப்டேட்..!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ‘அயலான்’ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘எஸ்கே21’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும், ராணுவம் தொடர்பான காட்சிகளை படமாக்க படக்குழு விரைவில் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, சிறப்பு பயிற்சிகளையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் உணர்வுகளையும் தேசபற்றையும் மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘எஸ்கே21’ திரைப்படம் சிவாகார்த்திகேயனின் புதிய பரிமாணமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.