மீண்டும்  மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் மக்கள் செல்வன்! வெளியான போட்டோஸ்..!

 
1

மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததோடு இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அதிலும் பார்க்கப்பட்ட படமாக சாதனை படைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ட்ரைன்  படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை கடந்த ஆண்டு முதல் இருந்தே இயக்கி வருகின்றார் மிஸ்கின். தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் சில வெளியாக ட்ரெண்டாக உள்ளது.

அதில் விஜய் சேதுபதியின் முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன் காணப்படுவதோடு இதுவரை நாம் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றார் விஜய் சேதுபதி.  இந்த படத்திற்கு பௌசியா பாத்திமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

1

இவர் இதற்கு முன்பு உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளாராம். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்கின்றார்.

ட்ரைன் படத்தில் உள்ள பாடல் ஒன்றுக்கு ஸ்ருதிஹாசன் பாடி உள்ளார் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

From Around the web