தன் ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த மக்கள் செல்வன் - விஜய் சேதுபதி..!

 
1
சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் தனது முதல் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி இறங்குவதற்கு முன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக, பின்னணி நடிகராகவும் சிறு துணை நடிகராகவும் பணியாற்றினார். 

அவர் பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார், அந்த இரண்டும் வெற்றியடைந்து விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் பிரபலமான பெயராக மாற்றியது. அதன் பின்னர் நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். முன்னணி  ஹீரோக்களின் படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். 

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார். ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளரின் குழந்தைக்கு 'மிஸ்டர் கணியன்' என பெயர் சூட்டினார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From Around the web