மதுபோதை தலைக்கேறி காதலன் வீட்டில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை..!!

காதலனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வீட்டில் பிரபல நடிகை மதுபோதையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
malaika arora

பிரபல இந்தி சினிமா நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான். நடிகராகவும் தயாரிப்பாளராக இருக்கும் இவருடைய முன்னாள் மனைவி மலைகா அரோரா. கேரளாவைச் சேர்ந்த மலைகா, இந்திப் பட உலகில் பிரபல டான்ஸராக வலம் வந்தார். 

அர்பாஸ் கானை அவர் விவகாரத்து செய்ததும், தன்னை விட 12 வயது குறைவான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இருவரும் சேர்ந்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

arjun kapoor

இதன்காரணமாகவே அவர்களுடைய காதல் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அண்மையில் நடிகர் அர்ஜுன் கபூர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கான மும்பையிலுள்ள தனது வீட்டில் நெருங்கிய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டும் அவர் பார்ட்டி கொடுத்தார்.

அதில் பங்கேற்ற அவருடைய காதலியும் நடிகையுமான மலைகா ஆரோரா, மதுபோதையில் "தைக்க தைய தைய" பாட்டுக்கு தான் அவர் டான்ஸ் ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From Around the web