அர்ஜுன் கபூரின் அந்தரங்க போட்டோவை பகிர்ந்த 50 வயது காதலி- வெடித்தது சர்ச்சை..!!
சல்மான் கானின் உடன் பிறந்த மூத்த சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி தான் மலைகா அரோரா கான். இவர்கள் இருவருக்கும் 20 வயதில் ஒரு மகன் உள்ளார். அர்பாஸ் கானை விட்டு பிரிந்தவுடன், தன்னை விட 13 வயது இளையவரான அர்ஜுன் கபூரை காதலிக்க தொடங்கினார் மலைகா அரோரா.
ஆரம்பத்தில் மிகவும் ஒளிவு மறைவாக இருந்த இவர்களுடைய காதல், தற்போது வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தங்களுடைய காதலை மாறி மாறி வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இருவரும் மும்பையில் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அர்ஜுன் கபூர் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து, மலைகா அரோரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு “எனக்கு சொந்தமான சோம்பேறி பையன்” என்பதை செல்லமாக கேப்ஷூடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் கொந்தளித்து வருகின்றனர். காதலனாக இருந்தாலும், பெட்ரூமில் அவர் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிடுவது சரியில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மலைகா அந்த படத்தை நீக்கிவிட்டதாக தெரிகிறது.