மலேரியா மட்டும் காரணம் இல்லை... விஷால் குறித்து வலைப்பேச்சு அந்தணன்..!

மத கஜ ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் விஷாலை பார்த்த அனைத்து பத்திரிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். இத்தனை நாட்களாக கம்பீரமாக பார்த்த விஷாலா? இப்படி என்று சொல்லும் அளவிற்கு நேற்று விஷால் இருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த பலர் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர். விஷால் கடுமையான மலேரியா காய்ச்சலுடன் வந்து இருப்பதாக டிடி சொன்னாலும், இதற்கு மலேரியா காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை. அண்மைக்காலமாக விஷாலின் உடல்நிலை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது அதற்கு பலர் காரணமாக இருக்கிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் இயக்குனர் பாலா தான், அவன் இவன் படத்தில் மாறுகண் உடன் அந்த படத்தில் விஷால் நடித்திருந்தார். இதற்காக விஷால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த படத்திற்கு பிறகு விஷால் கடுமையான ஒற்றை தலைவலியுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வலியை மறப்பதற்காக விஷால் அவர்கள் சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டார். அதுதான் தற்போது விஷாலின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும், விஷாலை எளிதில் நெருங்க முடியாத அளவிற்கு பார்த்துக்கொண்டதால், விஷால் எந்த நல்லமுடிவும் எடுக்கவில்லை. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து விஷாலை வைத்து படம் எடுத்தார்கள் அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மன வேதனை அடைந்தார். தயாரிப்பு நிறுவனம் இவரை வைத்து படம் எடுக்க வந்த போது, அதில் கவனம் இல்லாமல், விஷால் செய்த சில தவறால், இவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன் வராததால் மன வேதனை அடைந்தார்.
அதுமட்டுமில்லாமல், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் தினம் தினம் பஞ்சாயத்து எல்லாம் நடக்கும். அங்கு ஏற்படும் மனஉளைச்சல், டென்ஷன் போன்றவை ஒரு காரணம் என்றாலும்,துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் ஏற்பட்ட சண்டை,நஷ்டம் போன்றவை விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்லலாம். இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து எப்படி நிம்மதியாக இருக்கலாம் என்பதற்காக விஷால் செய்த சில விஷயம் தான் அவரை இன்னைக்கு இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது. மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது, ஓட்டல் அறையில் கதவை மூடிக்கொண்டு படுத்த விஷால், 2 நாளாக எழுந்திருக்கவே இல்லை, பிறகு கதவை உடைத்து பார்த்தபோது தூங்கிக்கொண்டு இருந்து இருக்கிறார். இல்லாத்துக்கும் வலி தான் காரணம். எப்படி கம்பீரமாக இருந்த ஒரு நடிகன் இப்படி ஆகிவிட்டாரே என்று நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது என்று அந்தணன் பேசி உள்ளார்.