ஷங்கர் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் கால்பதிக்கும் மாளவிகா மோகனன்...?

 
மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் இவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது தனுஷ் நடித்து வரும் டி 43, இந்தியில் தயாராகி வரும் யுத்ரா போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

இதை தொடர்ந்து அவர் விரைவில் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதுவும் தில் ராஜூ தயாரிக்கும் ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கியாரா அத்வானியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. அதனுடைய முடிவு தெரிவதற்குள் ஷங்கர் இயக்கத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இந்த தகவலை படக்குழு உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web