பிரபல மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் மரணம்..!
Apr 11, 2024, 07:05 IST
நடிகர் சுஜித் ராஜேந்திரன், எர்ணாகுளத்தில் ஆலுவா - பரவூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் சுஜித் ராஜேந்திரன் துபாயில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் கேரளாவிற்கு வந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், அவர் பாடுவதிலும் நடனமாடுவதிலும் சிறந்தவர்.
இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த கினாவல்லி படத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் அப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது உயிரிழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.