நாட்டை விட்டு வெளியேறிய மல்லிகா ஷெராவத்..! என்ன காரணம் தெரியுமா?

 
1

பிரபல கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார். அதிக இந்தி படங்களிலும், ஹாலிவுட் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறி இருக்கிறார்.

மல்லிகா ஷெராவத் அளித்துள்ள பேட்டியில், “பெண்கள் குறித்த இந்தியர்களின் பார்வை மாறியுள்ளது. வெப் தொடர் மற்றும் திரைப்படங்களில் நிர்வாணம் அல்லது சில கவர்ச்சியான காட்சிகளை பார்ப்பதை மக்கள் முன்பைவிட அதிகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நான் கவர்ச்சியாக நடித்ததற்காக அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானேன். நான் சந்தித்த பொதுமக்கள், சந்தித்த தீர்ப்பு போன்ற பல விஷயங்கள் எனக்கு கொடுமையாகவும், துன்புறுத்தலாகவும் அமைந்தது. அதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தான், நான் இந்தியாவை விட்டு வெளியேறினேன்.

அது என்னை மிகவும் காயப்படுத்தியது. சிலர் என் விஷயத்தில் கொடூரமானவர்களாக தோன்றினார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் என்னை பற்றி பொய்களை பரப்பி உண்மையில்லாத கதைகளை உருவாக்கினார்கள்.

இதற்கும் மேலாக சில பேருடன் என்னை இணைத்து பேசினர். எனக்கு அவ்வளவு கொடுமை நடந்துள்ளது. என் வாழ்க்கையில் இவ்வளவு எதிர்மறை தேவையில்லை என்று முடிவு செய்து நாட்டை விட்டு வெளியேறினேன்” என்றார்.

From Around the web