யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று வெளியாகும் மாமனிதன் பட பாடல்..!

 
விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா

விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகியுள்ள ‘மாமனிதன்’ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் நான்காவது படமாக வெளிவரவுள்ளது ‘மாமனிதன்’. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படத்தின் பணிகள் துவங்கப்பட்டுவிட்டன. ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்த பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.

இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோக்கர் படம் மூலம் பிரபலமான குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முதன்முதலாக இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘தட்டிப்புட்டா... தட்டிப்புட்டா’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏ ராசா’ என்கிற பாடல் வெளிவரவுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் யுவன். மேலும் இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை யுவன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web