மாமன்னன் பட டிரெய்லர் வெளியீட்டுக்கு தேதி குறித்த படக்குழு..!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
udhayanidhi stalin

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. எனினும் படத்தின் டிரெய்லர் வெளியாகாமல் உள்ளது. தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். எனினும், நாளை எத்தனை மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என்பது தெரியவில்லை. அதுகுறித்த அப்டேட் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தை தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதனால் ஏற்கனவே இதை தனது கடைசிப் படம் என்று அறிவித்துவிட்டார். இதன்காரணமாகவே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் 29-ம் தேதி மாமன்னன் படம் திரை காண்கிறது. 
 

From Around the web