மாமன்னன் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு..!!
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, தனது ரெட்ஜெயிண்டு மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் ஃபகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாமன்னன் படப்பிடிப்பு சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது, சேலம், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் துவங்கிவிட்டன.
#MAAMANNAN @mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/E3mPZipl1T
— Udhay (@Udhaystalin) April 30, 2023
ரசிகர்கள் பலரும் படத்திற்கான முதல் பார்வை போஸ்டரை எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாமன்னன் படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு இணையான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பது உறுதியாகியுள்ளது.