ஓடிடியில் மிரட்ட வருகிறார் மம்மூட்டியின் 'பிரம்மயுகம்' ..!
இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வெளியான பூதக்காலம் படத்தில் ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான அந்த படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், அந்த இயக்குநர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள மற்றொரு ஹாரர் த்ரில்லர் படமாக பிரமயுகம் உருவாகி உள்ளது. பிரமயுகம் படத்தை விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒவ்வரு திரைப்படத்திலும் வெரைட்டி கதாபத்திரத்தில் தனித்துவமாக நடித்திருப்பார். ஓரினச் சேர்க்கையாளராக காதல் தி கோர் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து 72 வயதில் மிரட்டிய மம்மூட்டி இந்த படத்தில் கொடுமன் போட்டி எனும் மாந்திரீகனாக அலற விடுகிறார். படம் முழுவதும் மமூட்டியின் குறட்டை,சிரிப்பு,தடி சப்தம், நிழல் என ஒவ்வரு இடத்திலும் பீதி அடையும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் ஹனுமான் மலையை தூக்கி செல்வது போல மமூட்டி அவர்களின் நடிப்பு இந்த படத்தை தூக்கி செல்லும். மமூடிக்கு அடுத்ததாக தேவன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் அசோகன் அவர்களின் நடிப்பு நம்மை படத்தோடு கூட்டி செல்கிறது.
இந்த கதை 17ம் நூற்றாண்டில் நகர்கிறது அரசவையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக அங்கிருந்து தனது நண்பனுடன் இணைந்து தப்பித்து காட்டுக்குள் ஓடி வருகிறான் தேவன்(அர்ஜுன் அசோகன்). திக்குத்தெரியாத காட்டுக்குள் வந்து தனது நண்பன் கோராவுடன் தேவன் சிக்குகிறார். அதிலிருந்து தேவன் தப்பினாரா? இல்லையா? என்பது தான் இந்த பிரம்மயுகம் படத்தின் கதை. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மார்ச் 15ம் தேதி சரியாக ஒரு மாத காலத்தில் ஓடிடிக்கு வருகிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் பிரமயுகம் வெளியாகவில்லை. மம்மூட்டியின் இந்த படத்தை சோனி லைவ் பல கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ளது.