டி.எம். சவுந்தரராஜனுக்கு மரியாதை செய்த தமிழக அரசு..!!
மறைந்த திரைப்பட பாடகர் டி.எம். சவுந்தர ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பழம்பெரும் பாடகரான டி.எம். சவுந்தரராஜன் ஒரு காலத்தில் தமிழக இசைத்துறையின் ஜாம்பவனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி. ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிகர்களுக்கு இவர் தான் அதிகளவில் பாடல்களை பாடினார். அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடுவது டி.எம். சவுந்தர ராஜன் தனி அடையாளமாக இருந்தது.
சுமார் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தர ராஜன், கடந்த 2013-ம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்த இல்லம் அமைந்த மந்தைவெளியில் உள்ள சாலைக்கு “டி.எம். சௌந்தரராஜன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 24) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.