மறைந்த காதல் கணவருக்கு முன்னின்று இறுதிச்சடங்குகளை செய்த மந்திரா பேடி..!

 
கணவருடன் மந்திரா பேடி

மாரடைப்பால் மரணமடைந்த கணவர் ராஜ் கவுசலுக்கான அனைத்து இறுதிச்சடங்களையும் நடிகை மந்திரா பேடி தானே முன்னின்று செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர் ராஜ் கவுசல் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு மந்திரா பேடி என்கிற மனைவியும், வீர் மற்றும் தாரா என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மந்திரா பேடி பாலிவுட் தொலைக்காட்சி உலகின் முக்கிய பிரபலமாவார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகம் உண்டு. கடந்த 1999-ம் ஆண்டு ராஜ் கவுசல் மற்றும் மந்திரா பேடிக்கு திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகளாக இவர்கள் வலம் வந்தனர்.

இந்நிலையில் ராஜ் கவுசலுடைய திடீர் மரணம் திரையுலகத்தினர் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பலரும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று மாலை மறைந்த இயக்குநர் ராஜ் கவுசலுக்கான இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இதற்கான அனைத்து சடங்குகளையும் மனைவி மந்திரா பேடி செய்தார். உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது மண்பானை சுமந்தது முதல், அதை தகன மேடையில் வைத்து உடைத்தது வரை அனைத்து சடங்குகளையும் அவராகவே செய்தார். இது மரபுகளை உடைக்கும் விதமாகவும், நெகிழ்ச்சியாகவும் அமைந்தது.
 

From Around the web