பெண்ணை பற்றிய ஆணின் பார்வையை பேசும் விதமாக உருவாகிறது ‘மங்கை’ திரைப்படம்..!
‘கயல்’ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’ திரைப்படம் உருவாகி வருகிறது. ‘மங்கை’ குறித்து பேசிய இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, “ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மங்கை’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.
துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மங்கை’ திரைப்படம் பெண்ணை பற்றிய ஆணின் பார்வையை பேசும் விதமாகவும் ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மூணாறு, பூப்பாறை, தமிழ்நாட்டின் தேனி, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது,” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “‘மங்கை’ திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கும் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களோடு இணை இயக்குநராகவும் வசனகர்த்தாகவும் குபேந்திரன் காமாட்சி பணியாற்றியுள்ளார். இப்படத்தின் இசையை பிப்ரவரியிலும் திரைப்படத்தை மார்ச் மாதத்திலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 - cini express.jpg)