மணி ஹையிஸ்ட் சீசன் 5 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!

 
மணி ஹையிஸ்ட் சீசன் 5

உலகப் புகழ்பெற்ற மணி ஹையிஸ்ட் சிரீஸின் ஐந்தாவது சீசனின் வெளியீட்டு தேதி குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

மெக்சிக்கோ நாட்டில் தயாரான மணி ஹையிஸ்ட் சீரிஸ் உலகளவில் பிரபலமானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த சிரீஸுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஸ்பானிஷ் மொழியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனும் மிகுந்த பரபரப்புக்கு இடையில் நிறைவு பெற்றதை அடுத்து, எப்போதும் இதனுடைய அடுத்த சீசன் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெறும்.

அந்த வகையில் கடைசியாக வெளியான சீசன் 4 மிகுந்த பரபரப்புக்கு இடையில் முடிந்துள்ளது. இதனால் மணி ஹையிஸ்ட் சிரீஸின் ஐந்தாவது சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனுடைய தயாரிப்பு பல நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த சிரீஸின் ஐந்தாவது சீசன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகிறது. இது சீசன்-5-யின் முதல் பாகமாகும். அதை தொடர்ந்து தொடரின் ஐந்தாவது சீசன் இரண்டாவது பாகம் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது.

மணி ஹையிஸ்ட் சீசன் 5 தமிழிலும் நேரடியாக வெளியாகிறது. இந்த சிரீஸ் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மணி ஹையிஸ்ட் சீசன் 5 மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என எதிபார்க்கப்படுகிறது

From Around the web