பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து- மணிரத்னம் திடீர் முடிவு..!

 
மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மணிரத்னம் சென்னை திரும்பியுள்ளது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இதனுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஊட்டி, சத்தியமங்கலம், பொள்ளாச்சி போன்ற பகுதிகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக படக்குழுவினர் அனைவரும் பொள்ளாச்சியில் காத்திருந்தனர். அவர்களுடன் கதாநாயகன் கார்த்தியும் பொள்ளாச்சியில் இருந்தார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்புடன் சர்தார் படத்துக்கான ஷூட்டிங்கும் அங்கு நடைபெறவிருந்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி படப்பிடிப்பை மணிரத்னம் ரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் எதுவும் தெரியாத சூழலில், படக்குழுவினரையும் அவர் சென்னை திரும்ப கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களும் விரைவில் சென்னை திரும்புகின்றனர்.

மணிரத்னத்தின் இந்த செயல் படக்குழுவினர் மற்றும் கார்த்தி இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாடல் காட்சியை அவர் படமாக்க இருந்ததாகவும், தற்போது அந்த பாடலை உருவாக்கமலேயே படத்தை வெளியிட அவர் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

From Around the web